search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்16 ரக போர் விமானம்
    X
    எப்16 ரக போர் விமானம்

    எப்.16 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுமதி

    இந்தியாவுக்கு எதிராக எப்.16 ரக போர் விமானங்களை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 50 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொன்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பலாகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி பயங்கரவாத முகாம்களை அழித்தன. அதை தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எப். 16 ரக போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.

    இந்த போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை பயங்கரவாதிகளை அழிக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கி இருந்தது. அதை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இம்ரான்கான்,  டொனால்டு டிரம்ப்

    இந்த நிலையில் எப்.16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு ரூ.863 கோடிக்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை எந்த நேரமும் அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களிடம் இதற்கான அனுமதி பெற பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக எப். 16 ரக போர் விமானங்களை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×