என் மலர்

  செய்திகள்

  இன்ஸ்டாகிராம்
  X
  இன்ஸ்டாகிராம்

  இன்ஸ்டாகிராமில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முக்கிய பட்டியலில் முதல் 10 இடங்களில், ஒரே ஒரு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் இடம் பெற்றுள்ளார். அவர் யார்? எந்த பட்டியல்? என்பதை பார்ப்போம்.
  சமூக வலைத்தளங்களில் இன்று புகைப்படங்களை ஷேர் செய்யும் செயலிகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இன்ஸ்டாகிராம். இந்த பக்கத்தில், இன்று ஆண்டிராய்டு போன் வைத்திருக்கும் யாரும் இல்லாமல் இல்லை.

  திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் தங்கள் சுவாரஸ்யமான புகைப்படங்களை பகிர்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர்களின் பதிவுகளை பிரபலங்கள், தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட தொகை வசூலிக்கப்பது வழக்கம்.

  விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்

  இதன் அடிப்படையில் 2019ம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராமில் பணக்காரர் யார்? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், விளையாட்டு வீரர்களில் ஸ்பான்சர் பதிவுகளுக்கு யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டது.

  இதில் உலக அளவில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். இவர் 9வது இடத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 38 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

  விராட் கோலி

  இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் பதிவு ஒன்றுக்கு 1,96,000 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 66 ஆயிரம்) பெறுகிறார். இந்த பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9,75,000 டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து நெய்மர், மெர்சி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×