search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொமோடோ தேசிய பூங்கா
    X
    கொமோடோ தேசிய பூங்கா

    இந்த அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க பிரபல சுற்றுலா தலத்தை மூடும் இந்தோனேஷியா

    இந்தோனேஷியாவில் அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க, சுற்றுலா தலமாக இயங்கி வரும் பூங்காவையே அந்நாடு மூட உள்ளது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில்  அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. கொமோடோ,  படார்,  ரின்கா  ஆகிய பெரிய  தீவுகளும், 26 சிறு தீவுகளும்  இப்பூங்காவில்  அடங்கியுள்ளன.

    இதன் மொத்த  பரப்பு 1,733  சதுர  கிமீ  ஆகும். இந்த பூங்கா தொடக்கத்தில்,  கொமோடா டிராகன் எனும் அரிய பல்லி வகையை பாதுகாக்க கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    அதன்பின்னர் கடல்  உயிரினங்கள்  உட்பட  மற்ற  உயிரினங்களை  பாதுகாக்க  தொடங்கியது. இதையடுத்து 1991ஆம் ஆண்டு  இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    கொமோடோ டிராகன்கள்

    இந்நிலையில், இந்த பூங்காவில் வாழும் அரிய வகை கொமோடா டிராகன்களை பாதுகாக்க கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு இந்தோனேஷியா மூட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை காக்க நாங்கள் நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

    பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த டிராகன்களின் வாழ்வியல் முறை குறித்து அறியவே வருகை தருகின்றனர். எனவே, ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். மேலும் சுற்றுலா பயணிகளை லிமிட்டாக பூங்காவிற்குள் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என கூறினார்.

    Next Story
    ×