search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப்
    X
    டொனால்ட் டிரம்ப்

    ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் - டிரம்ப் பேட்டி

    பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது முன்பு இருந்ததை விட தற்போது கடினமாகிவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
    வாஷிங்டன்:

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இருநாடுகளும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை கைது செய்து இருப்பதாகவும், அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி டிரம்பிடம், ஈரான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப் பதில் அளித்து பேசியதாவது:-

    பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது முன்பு இருந்ததை விட தற்போது கடினமாகிவிட்டது. இதை நான் வெளிப்படையாக கூறுகிறேன். ஈரான் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. சி.ஐ.ஏ. உளவாளிகளை கைது செய்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது. அது வெறும் கட்டுக்கதை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×