search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் அளவை காட்டும் கருவி
    X
    நிலநடுக்கம் அளவை காட்டும் கருவி

    நியூசிலாந்தில் 5.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

    பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    வெலிங்டன்:

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

    இதேபோல், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டிலும் நேற்று இரவு 8.45 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×