என் மலர்

  செய்திகள்

  மினிபஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
  X
  மினிபஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

  துருக்கியில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருக்கி நாட்டில் சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  அங்காரா:

  துருக்கி நாட்டின் எல்லை வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களை தடுக்க  ஈரான் தனது எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், துருக்கி-ஈரான் நாடுகளின் எல்லையை ஒட்டிய வேன் என்ற பகுதியில் மினி பஸ் ஒன்று 67 அகதிகளை ஏற்றிக்கொண்டு சட்ட விரோதமாக இன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான நிலப்பரப்பை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. 

  இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த ஐந்து குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.     
  Next Story
  ×