search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இசாக் ரிக்சார்ட்
    X
    இசாக் ரிக்சார்ட்

    வீடியோ: சரளமாக தெலுங்கு பேசி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க வாலிபர்

    அமெரிக்காவில் இந்திய வாடிக்கையாளர்களிடம் திடீரென சரளமாக தெலுங்கு பேசி அமெரிக்க வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் இசாக் ரிக்சார்ட். இவர் அமெரிக்காவில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றுள்ளனர்.

    அவர்கள் தெலுங்கில் மாறி மாறி பேசிக் கொள்வதை கண்ட இசாக், வந்தவர்கள் தன்னை அழைக்கும்போதே, 'செப்பண்டி' என ஆரம்பித்துள்ளார். இதனை கேட்ட அந்த இளைஞர்கள் திகைத்துள்ளனர்.

    பின்னர் தொடர்ந்து இசாக்கிடம் பேச்சுக் கொடுத்து, தங்கள் கையில் இருந்த செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். மிக சரளமாக தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் வந்திருந்த இளைஞர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

    தெலுங்கு எப்படி தெரியும்? என கேட்டதற்கு இசாக், விஜயவாடாவில் 2 ஆண்டுகள் இருந்துள்ளதாகவும் அங்கு பணிபுரிந்தபோது தெலுங்கு விருப்பப்பட்டு கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

    இசாக் பேசும் வீடியோ பார்ப்பவர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் தடுமாற்றம் இன்றி தெலுங்கில் பதில் அளிப்பது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.




    Next Story
    ×