என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா அனுமதி
Byமாலை மலர்16 July 2019 2:34 PM GMT (Updated: 16 July 2019 2:34 PM GMT)
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
துபாய்:
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று முதல் புதிதாக தொடங்கியது.
இந்த புதிய விமான சேவையை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார்.
ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில், விமான சேவையை பார்வையிட அமீரகம் வந்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வானி லோகனி இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரிடம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள்களை கொண்டு செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் அனுமதி அளிக்கவேண்டும் என அமீரகம் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியர்களின் வேண்டுகோளையத்து பேசிய அஸ்வானி லோகனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ சுமை வரை கொண்டு செல்லலாம் என அனுமதி வழங்கினார்.
ஏற்கனவே 30 கிலோ சுமை வரை கொண்டு செல்ல அனுமதி இருந்தநிலையில் தற்போது அந்த அளவு 40 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது.
Next Story
×