search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மாகாந்தி 150-வது பிறந்த நாள்
    X
    மகாத்மாகாந்தி 150-வது பிறந்த நாள்

    காந்தி 150-வது பிறந்த ஆண்டையொட்டி தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி

    நிறவெறிக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    ஜோகனஸ்பர்க்:

    மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் லெனாசியா நகரில், இந்திய துணை தூதர் கே.ஜே.சீனிவாசா ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

    தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட சிறுவர்கள்

    சிறிய 3 சக்கர சைக்கிள்களில் குழந்தைகளும் பங்கேற்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 3 கி.மீ. தூர பேரணியின் முடிவில், காந்தி உருவம் பொறித்த நினைவு பதக்கம் வழங்கப்பட்டது.

    காந்தியின் கொள்கைகளான வாய்மை, அகிம்சை, சத்யாகிரகம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இப்பேரணி நடைபெற்றது.

    Next Story
    ×