என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  அதிவேகமாக சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்தது- 13 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே அதிவேகமாக சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் ஸ்வாத் நகரில் இருந்து லாகூர் நோக்கி இன்று ஒரு பயணிகள் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இஸ்லாமாபாத் அருகே ஹசன் அப்தால் என்ற இடத்தில் சென்றபோது, பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 34 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஹசன் அப்தால், டெக்சிலா, வாஹ் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிவேகத்துடனும், கவனக்குறைவாகவும் பேருந்தை ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×