search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகதிகளை சிறைப்பிடித்த அதிகாரிகள்
    X
    அகதிகளை சிறைப்பிடித்த அதிகாரிகள்

    அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ

    அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 228 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக மெக்சிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ உறுதி அளித்தது.

    அதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சமீபத்தில் மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளது. சரக்கு லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் கவுதமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×