search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்
    X
    தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்

    ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை விமான தாக்குதல்- 25 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் நேட்டோ தலைமையிலான கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளால் ஸ்திரமற்ற அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள், அரசுப் படைகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இழந்த பகுதிகளை மீட்க ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், காந்தகார் மாகாணத்தின் மராப் மாவட்டத்தில் தலிபான்கள் தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து நேட்டோ தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால், இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் குறித்து தலிபான்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே, ஹெராத் மாகாணத்தின் மலுமா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 10 தலிபான்களும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 9 வீரர்களும் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
    Next Story
    ×