search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ட்ரோம்போலி
    X
    ஸ்ட்ரோம்போலி

    இத்தாலியில் எரிமலை வெடித்து சுற்றுலா பயணி பலி

    இத்தாலியில் எரிமலை திடீரென வெடித்ததில், மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
    ரோம்:

    இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு வானுயரத்துக்கு சாம்பல் புகையை கக்கி வருகிறது.
    Next Story
    ×