என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இம்ரான்கான் - டிரம்ப் சந்திப்பு ஜூலை 22ம் தேதி நடைபெறும் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை
Byமாலை மலர்4 July 2019 1:01 PM GMT (Updated: 4 July 2019 1:01 PM GMT)
அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22-ம் தேதி அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதி, அந்த நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை நிறுத்தியது.
பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 5 நாள் அரசுமுறை பயணமாக ஜூலை 20-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது முதல் முறையாக அவர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்பை ஜூலை 22-ம் தேதி சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டிரம்பை ஜூலை 22-ம் தேதி சந்தித்து பேச உள்ளார். இருவரது சந்திப்பு முதல் முறையாக நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×