search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    யுரேனியம் செறிவூட்டுதலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    யுரேனியம் செறிவூட்டுதல் நடவடிக்கையை ஈரான் தொடர்ந்து மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே சமீபகாலமாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் படைகள் தங்கள் கடல் எல்லைக்குள் பறந்ததாக சுட்டு வீழ்த்தியது. எனவே ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அதை திரும்ப பெற்றார். ஆனால் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் தங்கள் நாட்டுடன் செய்யப்பட்டிருந்த அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் அரசு எந்தவித சர்வதேச அழுத்தத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், அணு ஆயுத கையிருப்பை அதிகப்படுத்த எவ்வளவு வேண்டுமானாலும் யுரேனியம் செறிவூட்டுதல் நடவடிக்கையை தொடர்ந்து ஈரான் அரசு மேற்கொள்ளும் என்றும் அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

    இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இது குறித்து டுவிட்டரில் டிரம்ப் கூறியதாவது: ஈரான் அரசு யுரேனிய செறிவூட்டுதல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மேலும் எந்த வித கட்டுபாடும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் என கூறுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதற்கான விளைவுகளை ஈரான் நிச்சயம் சந்திக்க நேரிடும், மேலும் அந்த விளைவுகள் இதற்கு முன் ஈரான் சந்திக்காத மிகவும் வலி தரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×