என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டுப்பால் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியமானது- ஆய்வில் புதிய தகவல்
Byமாலை மலர்4 July 2019 8:20 AM GMT (Updated: 4 July 2019 8:20 AM GMT)
குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் ஆரோக்கியமானது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்தனர். அப்போது ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 5 வகையான சத்துக்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தெரியவந்தது.
ஆட்டுப்பால் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது என்றும், இரைப்பை குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளின் குடலில் ஏற்படும் தொற்றுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்த ஆட்டுப்பால் உதவுகிறது.
தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்திலும் அல்லது குறைவாக தாய்ப்பால் சுரப்பதாலும் அதற்கு மாற்றாக பசும்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆனால் தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் ஆட்டுப்பாலில் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க பரிசீலிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேராசிரியர் ஹர் சரண் கிங் கூறும்போது,
மேலும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு அளிக்கும் பலன்கள் குறித்து உறுதி செய்ய எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்தனர். அப்போது ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 5 வகையான சத்துக்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தெரியவந்தது.
ஆட்டுப்பால் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது என்றும், இரைப்பை குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளின் குடலில் ஏற்படும் தொற்றுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்த ஆட்டுப்பால் உதவுகிறது.
தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்திலும் அல்லது குறைவாக தாய்ப்பால் சுரப்பதாலும் அதற்கு மாற்றாக பசும்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
மேலும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் ஆட்டுப்பால் குழந்தைகளுக்கு அளிக்கும் பலன்கள் குறித்து உறுதி செய்ய எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
Next Story
×