search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹயா பிண்ட் அல் ஹுசைன் - ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம்
    X
    ஹயா பிண்ட் அல் ஹுசைன் - ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டோம்

    தலைமறைவான மனைவி குறித்து துபாய் மன்னர் எழுதும் விரக்தி கவிதைகள்

    துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது மனைவி தலைமறைவான விரக்தியில், அது குறித்து கவிதைகளை எழுதி வருகிறார்.
    துபாயை ஆட்சி புரிபவர் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (69). இவரது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைன். இருவருக்கும் சையத்(7), ஜலீலா(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னரிடம் இருந்து ஹயா விவாகரத்து கோரியுள்ளார். அதன் பின்னர் மன்னரை விட்டு பிரிந்து கடந்த மே மாதம் தனது குழந்தைகளுடன் தலைமறைவானார்.

    ஹயா, ஜெர்மனிக்குச் சென்றதாகவும், அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹயா, லண்டனில் தலைமறைவாகி இருப்பதாகவும், அங்கு தஞ்சம் கேட்டுள்ளதாகவும் செய்தி பரவியது.

    துபாய் மன்னர் எழுதிய கவிதைகளின் தலைப்பு

    இந்நிலையில் மனைவி பிரிந்த விரக்தியில் உள்ள துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், கவிதைகளை எழுதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த கவிதைகள் உருது மொழியில் உள்ளன.

    சமீபத்தில் அவர் எழுதிய கவிதைக்கு, ‘நீ வாழ்ந்தாய், இறந்தாய்’ என தலைப்பிட்டு குறிப்பிட்டிருப்பதாவது:

    நீ நம்பிக்கை துரோகி, விலைமதிப்பற்ற என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டாய். உனது விளையாட்டு வெளியே தெரிந்துவிட்டது. நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்து விட்டன.

    இனி உனக்கு என் இதயத்தில் இடமில்லை. நாம் யாராக இருந்தோம்? நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல. இனி உன்னை பற்றிய கவலை இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.









    Next Story
    ×