search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட் அனுமதி

    விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் மிகப்பெரிய பின்னடைவாக நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு வழக்கு தொடர லண்டன் ராயல் கோர்ட் அனுமதியளித்தது.
    லண்டன்:

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஒருவாரத்துக்குள் எழுத்து மூலமாக அவர் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    கோர்ட்டுக்கு இன்று விஜய் மல்லையா வந்த போது எடுத்த படம்


    அவ்வகையில் அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தின்மீது இன்று விரிவான விசாரணை நடைபெற்றது.

    விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர்களும், இந்திய அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் பிரிவும் (கிரவுன் பிராசிக்கியூஷன் சர்வீஸ்) வாதாட்டினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட லண்டன் ராயல் கோர்ட், தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு வழக்கு தொடர அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Next Story
    ×