search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாதிரிப்படம்
    X
    மாதிரிப்படம்

    வாட்ஸ் அப்:குட் மார்னிங் முதல் குட் நைட் வரை நன்மைக்கே -ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

    சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் வாட்ஸ் அப்பினை அதிக நேரம் பயன்படுத்துவது நன்மைதான் என சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    ஆண்டிராய்டு போன்கள் வருவதற்கு முன், காலை எழுந்தவுடன் டீ, காபி போட்டு குடிப்பதே பலரது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று, காலை கண் விழித்தவுடன் அருகில் வைத்திருந்த செல்போனை தேடி எடுத்து நெட்டை ஆன் செய்வதே வழக்கமாகிவிட்டது.

    காலையில் நெட்டினை ஆன் செய்தவுடன் வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை பார்த்தால் நமது மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணருகிறோம்.

    ஒரு குட் மார்னிங் குறுஞ்செய்தியோடு வரும் பூக்கள் காலையில் நம்மை உற்சாகப்படுத்த போதுமானதாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொருவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம். ஒருவருடைய மனநிலை என்ன என்பதை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலமே அறிய முடிகிறது.

    செல்போனை அனைவரும் அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது என கூறினாலும் வாட்ஸ் அப் ஒரு விதி விலக்கு என்பதைப் போல ஆய்வில் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளது.



    இது குறித்து மனித கணினி சர்வதேச ஆய்வுக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றை போக்க வாட்ஸ் அப் செயலியில் உள்ள குரூப் சாட், தனி நபர் சாட் ஆகியவை பெரும் உதவி செய்கின்றன என தெரிய வந்துள்ளது.

    இந்த ஆய்வு குறித்து இங்கிலாந்தின் எட்ஜ் கில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகையில், ‘சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவது அபாயமான ஒன்று என கருதுகின்றனர். அது அந்த அளவு மோசமானது அல்ல.



    அருகில் இல்லாத குடும்பத்தினர், அரட்டை அடிக்கும் நண்பர்கள் ஆகியோர் உடன் இருப்பதைப்போல உணர வைப்பதில் வாட்ஸ் அப் போன்ற செயலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிமை எனும் கொடிய நோயை இதுபோன்ற செயலிகளே போக்குகின்றன’ என கூறியுள்ளார்.





    Next Story
    ×