search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    புகை பிடிக்க தடை என்பதை விவரிக்கும் காட்சி
    X
    புகை பிடிக்க தடை என்பதை விவரிக்கும் காட்சி

    ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை

    ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
    டோக்கியோ:

    ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மேற்கூறிய அனைத்து அமைப்புகளிலும் இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

    அதேபோல் தடையை மீறி புகைபிடிக்கும் நபர்கள் 3 லட்சம் யென் (ரூ.2 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 
    Next Story
    ×