search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பானுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் - பிரதமர் மோடி
    X

    புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பானுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் - பிரதமர் மோடி

    புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பானுடன் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    ஒசாகா:

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ளது. இதில் ஜி20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஒசாகா வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், சுவிசோட்டல் நங்காய் ஓட்டலுக்கு சென்ற அவரை இந்திய சமூகத்தினர் வரவேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.



    இதற்கிடையே, இன்று மதியம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், குபேயில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பதால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும். புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பானுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.
    Next Story
    ×