search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மீண்டும் சிறந்த ஃபார்ம்’ பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு வாழ்த்துக் கூறிய இம்ரான் கான்
    X

    ‘மீண்டும் சிறந்த ஃபார்ம்’ பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு வாழ்த்துக் கூறிய இம்ரான் கான்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது. இதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்துக் கூறியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள்  மோதின.

    இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்க ஆட்டம் வெற்றி பாதையை நோக்கி பயணித்தது.  

    ஆனால் ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தில் பஹார் ஜமான் 9 (10) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அதனையடுத்து பாபர் அசாம் களம் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது.  இதனிடையே ஆட்டத்தின் 10.2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இமாம் உல்-ஹக் 19 (29) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

    3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் 50 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  ஆட்டத்தின் 26.2 வது ஓவரில் பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

    அடுத்த களம் இறங்கிய பாக். அணி வீரர் ஹாரிஸ் சோகைல், பாபர் அசாமிற்கு துணையாக நின்று ரன்களை குவிக்கத் தொடங்கினர். ஆட்டத்தின்  41.5 வது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்த பாக். ஜோடி 200 ரன்களை கடந்தது.  ஆட்டத்தின் 44.3 வது ஓவரில் சோகைல் அரை சதத்தை கடந்தனர்.  

    இருவரின் ஜோடியை பிரிக்க எண்ணிய நியூசிலாந்து அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.  இதனிடையே ஆட்டத்தின் 47.3 வது ஓவரில் பாபர் அசாம் தனது சதத்தை பதிவு செய்தார்.    ஹாரிஸ் சோகைல் 68(76) ரன்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.



    இதன் மூலம்  ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ரன்கள் எடுத்தது.  முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

    இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு என் வாழ்த்துக்கள்.

    குறிப்பாக மிகச்சிறப்பாகவும், திறமையாகவும் விளையாடிய பாபர், ஹரிஸ், ஷகின் ஆகியோருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.  
    Next Story
    ×