search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்
    X

    சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்

    சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தண்ணீருக்காக மக்கள் படும் துயரம் குறித்து ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.
    கலிபோர்னியா:

    சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், ஜூன் 15 ந்தேதி 2018ம் ஆண்டு புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு,  2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 46 லட்சம் மக்களுக்கு புழல் ஏரி தண்ணீர் வழங்குகிறது என குறிப்பிடப்பட்டு  உள்ளது.

    இந்த நிலையில் ''மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும்'' என ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    "மழையால் மட்டுமே சென்னையை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற முடியும். முற்றிலும் வெற்று கிணறு, மற்றும் தண்ணீர் இல்லாத நகரம். நான்கு முக்கிய நீர் தேக்கங்கள் முற்றிலும் வறண்டு விட்டன. தென்னிந்திய நகரமான சென்னை நெருக்கடியில் உள்ளது.

    கடுமையான நீர் பற்றாக்குறை அவசர தீர்வுகளுக்காக  கட்டாயத்தில் உள்ளது. குடியிருப்பாளர்கள் அரசாங்க தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியது உள்ளது.



    நீர் நிலைகள் குறைந்துவிட்டதால், ஓட்டல்களும், உணவகங்களும் தற்காலிகமாக மூடத் தொடங்கி உள்ளன. நகரத்தில் உள்ள அதிகாரிகள் மாற்று நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து வருகின்றனர் - ஆனால் சமூகம் தொடர்ந்து மழைக்காக பிரார்த்தனை செய்கிறது” என லியோனார்டோ டிகாப்ரியோ  கூறி உள்ளார்.
    Next Story
    ×