என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 3 பேர் உடல் கருகி பலி
Byமாலை மலர்23 Jun 2019 9:16 PM GMT (Updated: 23 Jun 2019 9:16 PM GMT)
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் பேர் தீயில் உடல் கருகி உயிர் இழந்தனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களில் வேகமாக பரவியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள மேலும் 2 கட்டிடங்களிலும் தீப்பிடித்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், 51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 3 பேர் தீயில் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
×