search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி
    X

    ரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி

    ரஷியாவில் உணவுக்காக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவையும் தாண்டி பனிக்கரடி ஒன்று சுற்றித் திரிந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    மாஸ்கோ:

    உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில உயிரினங்கள் மாற்று வாழ்விடம் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. 

    இந்நிலையில், ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது.



    பனி நிறைந்த கடற்கரை, ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் இவ்வகை பனிக்கரடி கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் சுற்றி திரிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.

    இதுதொடர்பாக உள்ளூர் விலங்குகள் நல ஆர்வலர் ஒலேக் ஷிரேஷ்வேகை கூறுகையில், பனிக்கரடி ஆர்ட்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் உணவு தேடி இடம் பெயர்ந்து நகருக்குள் வந்திருக்கலாம் அல்லது வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம். 40 ஆண்டுக்கு பிறகு போலார் பனிக்கரடி செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் சுற்றித்திரிவது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
    Next Story
    ×