search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் - அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் விமான தாக்குதலில் 16 பயங்கரவாதிகள் பலி
    X

    ஈராக் - அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் விமான தாக்குதலில் 16 பயங்கரவாதிகள் பலி

    ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    பாக்தாத்:

    சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் உள்ள வாடி அல்-கிஸ்ஸாப் என்ற இடத்தில் சில பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, இன்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அப்பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×