search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் அசத்திய இந்திய வம்சாவளி சிறுமி
    X

    மென்ஸா அறிவுத்திறன் போட்டியில் அசத்திய இந்திய வம்சாவளி சிறுமி

    இந்திய வம்சாவளியை சேர்ந்த 11 வயது சிறுமியான ஜியா வடுச்சா ‘மென்ஸா’ அறிவுத்திறன் போட்டியில் 162 மதிப்பெண்களை பெற்று எலைட் கிளப்பில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் உள்ள உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் மனிதர்களின் பொது அறிவுத் திறனை மதிப்பிடுவதற்கு ஆண்டுதோறும் அறிவுக்கூர்மை (ஐ.கியூ.) போட்டிகளை நடத்தி வருகிறது.

    கடந்த ஆண்டில் பொதுஅறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு அசத்தாலாக பதிலளித்து, 162 மதிப்பெண்களை பெற்று, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அறிவுத்திறன் பெற்றவன் என்ற சாதனையை இந்திய வம்சாவளியை சேர்ந்த துருவ் கார்க் என்ற 13 வயது மாணவன் சாதனை படைத்திருந்தார்.

    இதைதொடர்ந்து, துருவ் கார்கின் பத்து வயது தம்பியான மெஹுல் கார்க் ‘மென்ஸா’ அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுத்தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்றதுடன் மிகவும் குறைந்த வயதில் இதில் பங்கேற்றவன் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தினான்.  

    இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரிட்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தம்பதியரான ஜிக்னேஷ்-பிஜால் ஆகியோரின் மகளான ஜியா வடுச்சா என்ற 11 வயது பெண் சமீபத்தில் நுழைவுத்தேர்வில் 162 மதிப்பெண்களை பெற்று ‘மென்ஸா எலைட் கிளப்’ அமைப்பில் அங்கத்தினராக நுழையும் தகுதியை சமீபத்தில் பெற்றுள்ளார்.
    Next Story
    ×