search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா
    X

    சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா

    இந்தியாவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் மாபெரும் யோகாசன முகாமை இந்திய தூதரகம் நடத்தியது.
    ஜெத்தா:

    உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.

    2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    ஐந்தாவது ஆண்டாக வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இந்த தினத்தை எந்த நகரில் கொண்டாடலாம்? என்று பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது.



    டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய 5 நகரங்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் ராஞ்சி நகரில் வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று ராஞ்சியில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள  இந்திய தூதரகம் மற்றும் அரபு யோகா பவுண்டேஷன் சார்பில் ஜெத்தா நகரில் மாபெரும் யோகாசன முகாம் நடைபெற்றது. இங்குள்ள சர்வதேச பள்ளியில் நடைபெற்ற முகாமில் சவுதிஅரேபியாவிற்கான இந்திய தூதரர் அசிப் சயது மற்றும் துணைதூதர் நூர் ரகுமான் ஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.
    Next Story
    ×