search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் 2 எதிர்க்கட்சி தலைவர்கள் கைது - இம்ரான்கான் அரசு நடவடிக்கை
    X

    பாகிஸ்தானில் 2 எதிர்க்கட்சி தலைவர்கள் கைது - இம்ரான்கான் அரசு நடவடிக்கை

    ஆசிப் அலி சர்தாரியை தொடர்ந்து பாகிஸ்தானில் 2 எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து இம்ரான்கான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை நிறுவனருமான ஆசிப் அலி சர்தாரி சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    வங்கிகளில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இங்கிலாந்து ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு அவர் மனு செய்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    அதை தொடர்ந்து அவரை தேசிய பொறுப்புடைமை ஆணையம் கைது செய்தது. பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

    அவரை தொடர்ந்து மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களை இம்ரான்கான் அரசு கைது செய்துள்ளது. முத்தாக்கிதாகுவாமி இயக்க தலைவர் அல்டாப் உசேன் (65). பாகிஸ்தானைவிட்டு வெளியேறி லண்டனில் தங்கியுள்ளார். அவரை ஸ்காட்லாந்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு கூட்டம் நடத்தினார். அதில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது, அது உலகம் முழுவதும் புற்று நோயாக வளர்கிறது என்று பேசினார். அதற்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுளார்.

    முத்தாகிதா குவாமி இயக்க கட்சி கராச்சியில் கடந்த 30 ஆண்டுகளாக செல்வாக்குடன் திகழ்கிறது. அக்கட்சியின் தலைவர் அல்டாப் உசேன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும், முன்னாள் பிரமுகரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) தலைவருடான நவாஸ் செரீப்பின் தம்பி ஷெபாஸ் செரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ் நேற்று லாகூரில் கைது செய்யப்பட்டார்.

    இவரை பண மோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை ஆணையம் கைது செய்தனர்.
    Next Story
    ×