என் மலர்

  செய்திகள்

  சீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி
  X

  சீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
  பீஜிங்:

  சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சாலைகள், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்துக்கு உட்பட்ட 6 நகரங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தினால் 1300 வீடுகள் சேதமடைந்துள்ளன, 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் மழை தொடர்பான விபத்துகளால் 9 பேரும், குவாங்டாங் மாகாணத்தில் 7 பேரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேரைக் காணவில்லை.

  அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழையால் ஏற்படும் சேதம் இன்னும் அதிகமாகும் என தெரிகிறது.

  Next Story
  ×