என் மலர்

  செய்திகள்

  அமெரிக்காவில் இரண்டாவது தாயாக வந்து சிறுமியின் உயிரை பறித்த இந்திய வம்சாவளி பெண்
  X

  அமெரிக்காவில் இரண்டாவது தாயாக வந்து சிறுமியின் உயிரை பறித்த இந்திய வம்சாவளி பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வளர்ப்பு மகளையே கொன்றுள்ளார். இவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  நியூயார்க்:

  அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவரது மகள் அஷ்தீப் கவுர்(9). தனது மனைவியை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்பவரை மணந்தார்.

  பின்னர் மூவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி, அஷ்தீப் குளியலறையில் இருந்த பாத் டப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

  சிறுமி தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் தெரிவித்திருந்தார். ஆனால், பிரேத பரிசோதனை செய்யும்போது அதில் அஷ்தீப் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.  இதனையடுத்து ஷம்தாய் கைது செய்யப்பட்டார். பின்னர் குயின்ஸ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கிற்கு குயின்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

  இதில் ஷம்தாய் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×