search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் ஐதராபாத் வாலிபர் குத்திக்கொலை
    X

    இங்கிலாந்தில் ஐதராபாத் வாலிபர் குத்திக்கொலை

    இங்கிலாந்தில் ஐதராபாத் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லண்டன்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது நதீமுதின் (24). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் ஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி இருந்தார். புறநகரில் பெர்க்ஷிர், பகுதியில் ஸ்லப் என்ற இடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார். உடனே அவரை சூப்பர்மார்க்கெட்டில் பல இடங்களில் தேடினர். இறுதியில் பாதாள கார் நிறுத்தும் அறையில் பார்த்தபோது, கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் 26 வயது வாலிபரை பிர்மிஸ் காமில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்லப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. ஆனால் எதற்காக முகமது நதீமுதினை கொலை செய்தான் என தெரியவில்லை.

    கொலை செய்யப்பட்ட நதீமுதினின் பெற்றோர் ஐதராபாத் பழைய நகரை சேர்ந்தவர்கள். தற்போது இவருடன் லண்டன் சவுத் ஹாலில் தங்கி உள்ளனர். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. மனைவி பெயர் அப்சரி. டாக்டராக இருக்கிறார். கர்ப்பிணியான அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கிடையே நதீமுதின் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×