என் மலர்

  செய்திகள்

  இலங்கை மந்திரிகள் அரசு பணத்தை செலவு செய்ய நாடாளுமன்றம் தடை
  X

  இலங்கை மந்திரிகள் அரசு பணத்தை செலவு செய்ய நாடாளுமன்றம் தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகள் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
  கொழும்பு:

  இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
   
  ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.

  சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.  நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன. 16-ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.

  இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

  இந்நிலையில், இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, இலங்கை மந்திரிகளும் அரசு பணத்தை செலவு செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் இன்று நிறைவேறியது. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. #SriLankaParliament #SriLankaMinisters
  Next Story
  ×