search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு - 24 பாலஸ்தீனர்கள் பலி
    X

    காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு - 24 பாலஸ்தீனர்கள் பலி

    காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gaza # IsraelNavyfired
    காசா :

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ் இயக்கத்தினர் நோக்கம் ஆகும்.ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என கூறுகிறது.

    இந்நிலையில், காசா பகுதியில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்கள் 24 பேர் இஸ்ரேல் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாலஸ்தீன் உயர் தேசிய குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காசா கடற்பகுதியில் படகுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், குண்டு துளைத்து 24 பாலஸ்தீனர்கள் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Gaza # IsraelNavyfired
    Next Story
    ×