search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் நீங்கள் குடிக்கும் ஒரு கிளாஸ் மது - புதிய ஆய்வில் தகவல்
    X

    உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் நீங்கள் குடிக்கும் ஒரு கிளாஸ் மது - புதிய ஆய்வில் தகவல்

    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தினமும் ஒரு கிளாஸ் மது குடிக்கும் பழக்கம் உடையவர்களின் வாழ்நாளில் 20% குறைவதாக தெரியவந்துள்ளது. #LiquorDrinkingCauseDeath
    நியூயார்க்:

    சியர்ஸ்..... இந்த சப்தம் எத்தனை முறை ஒரு நாளைக்கு கேட்கிறதோ அத்தனை நெருக்கத்துக்கு எமன் வந்துகொண்டிருக்கிறான். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 85 வயது வரை உள்ள 4 லட்சம் மக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த உண்மை இது.

    ஆம். வெளிநாடுகளில் பொதுவாகவே சாதரணமாக தண்ணீர் குடிப்பதுபோல ஒரு கிளாஸ் மதுவை ஆயாசமாக குடித்து செல்வதை நாம் படங்களில் பார்த்து இருக்கிறோம். அதை நம்ம ஊரிலும் பின்பற்றவும் துவங்கிவிட்டோம். சில ஆய்வு அறிக்கைகளின்படி, தினமும் ஒரு கிளாஸ் மது அருந்துவது இதயநோயை தடுக்கும்.

    ஆனால், தற்போது சாரா எம் ஹார்ட்ஸ் என்பவர் நடத்திய இந்த ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மது அருந்துவதன் மூலம் உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை இழக்கிறீர்களாம். அதாவது 100 வயது வாழ வேண்டியவர் 80 வயதிலேயே மரணிப்பார் அப்படியானால் 50 வயதில் இயற்கை மரணம் நிகழ வேண்டிய ஒருவருக்கு 30 வயதிலேயே எமன் தன் வாகனத்தில் ஏற்றிச்சென்றுவிடுவான்.



    இந்த ஆய்வின் மூலம், தினமும் ஒரு கிளாஸ் மது என்பது இதய நோயை தடுப்பது போலவே, புற்றுநோய்க்கு வழிவகை செய்கிறதாம். இதயநோய் தவிர அனைத்து நோய்களுக்கும் இந்த ரெகுலர் மதுப்பழக்கம் வழிவகை செய்யும். தினமும் ஒரு கிளாஸ் மது என்ற விகிதத்துக்கே வாழ்நாளில் 20% இழக்கிறோம் என்றால் உச்சிக்கு ஏறும்வரை குடிக்கும் குடிமகன்களுக்கு?

    ஒருவேளை உங்கள் கைகளில் இப்போது மது இருந்தால் குடிக்காதீர்கள்.. அது உங்கள் வாழ்நாளை கரைக்கும் திறன்கொண்ட திரவம். #LiquorDrinkingCauseDeath
    Next Story
    ×