search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் கனமழை - 1.27 லட்சம் மக்கள் வெளியேற்றம்
    X

    சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் கனமழை - 1.27 லட்சம் மக்கள் வெளியேற்றம்

    தெற்கு சீனாவில் அமைந்துள்ள குவாண்டாங் மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.27 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    பெய்ஜிங் :

    சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாண்டாங் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இங்குள்ள 27 மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    சுமார் 44 ஆயிரத்து 700 ஹெக்டேர் பண்ணை நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 1 பில்லியன் யுவான்(146 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரபல நாளிதழான சின்குவா செய்தி வெளியிட்டுள்ளது.

    இதனால், அப்பகுதியில் வசித்துவந்த 1.27 லட்சம் மக்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு கோடைகாலத்திலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை சீனா வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×