search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி
    X

    ஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி

    ஜப்பானில் காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் முதல்முறையாக பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #japanbullfighting #womenpermit
    டோக்கியோ:

    ஜப்பானில் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்றாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் போட்டி வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதுவரை ஆண்கள் மட்டுமே வளையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், யாமகோஷி மாவட்டத்தில் நடைபெற்ற டோக்யு போட்டியில் முதல்முறையாக யுகி அரகி என்ற பெண் போட்டி வளையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



    சில மாதங்களுக்கு முன் சுமோ மல்யுத்த வளையத்திற்குள் சென்று முதலுதவி செய்ய முயன்ற பெண்கள் வெளியேற்றப்பட்டனர். பெண்கள் நுழைந்ததால் அந்த இடம் அசுத்தம் அடைந்ததாக கூறி, அதனை உப்பு, ஒயின் மற்றும் அரிசி கொண்டு தூய்மைப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #japanbullfighting #womenpermit

    Next Story
    ×