search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவீந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளை ஒட்டி எகிப்தில் 5 நாள் கலாச்சார திருவிழா
    X

    ரவீந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளை ஒட்டி எகிப்தில் 5 நாள் கலாச்சார திருவிழா

    புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு எகிப்து தலைநகரான கெய்ரோவில் 5 நாள் கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது.
    கெய்ரோ:

    இந்திய கவிஞர்களின் பட்டியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் 1913ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர். அவரது 155-வது பிறந்த நாளை முன்னிட்டு, எகிப்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கான மௌலானா ஆசாத் மையம் இணைந்து மே 8 முதல் 12 வரை, 5 நாள் கலாச்சார கண்காட்சியினை நடத்துகின்றனர்.

    இந்த கண்காட்சியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற உள்ளன. எகிப்திய எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்ட தாகூரின் புத்தகங்கள், அந்நாட்டின் தேசிய நூலகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள வரை கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட தாகூர் குறித்த சிறந்த கேளிக்கை சித்திரங்களை வரைபட கண்காட்சியில் மே 8 முதல் 5 நாட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “சப்மோச்சன்” என்ற நடன நாடகத்தினை, கொல்கத்தாவைச் சேர்ந்த புகழ் பெற்ற நடன கலைஞர் “டோனா கங்குலி” மே 9 அன்று நாடகம் நடத்த உள்ளார்.

    தொடர்ந்து கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள “காரே பாய்ரே” என்ற படம் மே 10 அன்று கண்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

    மே-11 ஆம் தேதி ரவீந்திர நாத் தாகூரின் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற ஸ்ரேயா குஹதாகுர்தா, எகிப்து மக்களுக்காக ரவீந்திர நாத் தாகூர் எழுதி இசையமைத்த பாடல்களை பாட உள்ளார். #Tagor #Egypt
    Next Story
    ×