search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசர்பைஜான் நாட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து - 30 பேர் பலி
    X

    அசர்பைஜான் நாட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து - 30 பேர் பலி

    அசர்பைஜான் தலைநகர் பாகுவில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் வரை பலியாகினர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    பாகு:

    அசர்பைஜான் நாட்டு தலைநகராக உள்ளது பாகு. இந்த நகரில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமானோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை அந்த போதை மறுவாழ்வு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மீட்பு படையினரும் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
     
    இந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×