search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் அரசுப்படை வான் தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் பலி
    X

    சிரியாவில் அரசுப்படை வான் தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் பலி

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் 23 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியார்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றர். கிளர்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா தலைமையிலான அரசுக் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஹராஸ்தா, ஹமவுரியா மற்றும் தவுமா ஆகிய பகுதிகளில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு வான் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 23 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரிட்டனில் இருந்து செயல்படும் சிரிய போர் கண்காணிப்பு மையம் பொதுமக்கள் பலியானதை உறுதி செய்துள்ளது.
    Next Story
    ×