search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் முதல் முறையாக ‘செனட்’ உறுப்பினராக இந்துப் பெண் நியமனம்
    X

    பாகிஸ்தானில் முதல் முறையாக ‘செனட்’ உறுப்பினராக இந்துப் பெண் நியமனம்

    பாகிஸ்தானில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி ஆக உள்ள நிலையில் அங்கு மைனாரிட்டி ஆக உள்ள இந்துப்பெண் ஒருவர் ‘செனட்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர். இந்த நிலையில் அங்கு மைனாரிட்டி ஆக உள்ள இந்துப்பெண் ஒருவர் ‘செனட்’ உறுப்பினர் ஆகியுள்ளார்.

    அவரது பெயர் கிருஷ்ண குமாரி. இவர் நாகர்பார்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. சிந்து மாகாணம் தர் தொகுதி செனட் உறுப்பினருக்கான பொது பிரிவுக்கு தேர்தல் நடந்தது.

    அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர் பாகிஸ்தான் முதல் இந்து செனட் பெண் உறுப்பினர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

    இவரது குடும்பம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது. இவரது தாத்தா ரூப்லோ கோல்கி சிந்து மாகாணத்தில் 1857-ம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து போராடினார்.

    கிருஷ்ணகுமாரி ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 9-வது படித்த போது 16 வயதில் இவருக்கு திருமணம் நடந்தது. அதைதொடர்ந்து படித்து சிந்து பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பட்டம் பெற்றார்.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி தான் பல பெண் தலைவர்களை உருவாக்கியுள்ளது. இக்கட்சியை சேர்ந்த பெனாசிர் புட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு துறை மந்திரி ஆனார். பெக்மிதா மிர்ஷா முதல் பாராளுமன்ற பெண் சபாநாயகர் ஆக நியமிக்கப்பட்டார். #tamilnews
    Next Story
    ×