என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பிரான்சில் 5 குழந்தைகளை கொன்று புதைத்த தாய்
Byமாலை மலர்1 Dec 2017 10:40 AM IST (Updated: 1 Dec 2017 10:40 AM IST)
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பிறந்த 5 குழந்தைகளை கொன்று புதைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மல்ஹவுஸ் நகரை சேர்ந்தவர் சில்வி எச் (53) இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் சில்வியாவுக்கும், அண்டை வீட்டினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பு சில்வி தனக்கு பிறந்த 5 குழந்தைகளை பெற்று யாருக்கும் தெரியாமல் கொன்று புதைத்து விட்டதாக போலீசில் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சில்வியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் பெற்ற 5 குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவற்றை வீட்டின் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் புதைத்ததாகவும் கூறினர். அதைதொடர்ந்து காட்டில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவற்றில் 2 குழந்தைகள் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே 5வது குழந்தையின் உடல் சில்வியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
அதைதொடர்ந்து சில்வி கைது செய்யப்பட்டார். அவர்மீது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் இது போன்று ஒரு பெண் தான் பெற்ற குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்றார். அந்த வழக்கில் அவருக்கு 14 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

Next Story
×