என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலியை கொன்ற வழக்கு: மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு சிறை
Byமாலை மலர்24 Nov 2017 8:26 AM GMT (Updated: 24 Nov 2017 8:26 AM GMT)
காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோகனஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ்(29),கடந்த 2013-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதத்தில் பிஸ்டோரியசுக்கு 5 ஆண்டுக்கு பதில் 15 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு முறையிட்டது.
இதையடுத்து, பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். தண்டனை அறிவிக்கப்பட்டதும் பிஸ்டோரியஸ் உடனடியாக பிரிட்டோரியா நகரில் உள்ள கோசி மாம்புரு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தனது தண்டனை காலத்தை கழித்துவரும் அவர் இன்று இரு கைகளின் மணிக்கட்டுகளும் அறுபட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்ததாக ஆப்பிரிக்க ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
அவர் கை மணிக்கட்டுகளை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கக்கூடும் என்னும் யூகச் செய்திகளை மறுத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ், சிறையில் தூங்கி கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததால் கை மணிக்கட்டுகளில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தென்னாப்பிரிக்க நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பிஸ்டோரியஸ் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருக்கும் பிஸ்டோரியஸ், ரிட்டோரியா நகரில் உள்ள அட்டெரிட்கேவில்லி சிறையில் கடந்த புதன்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×