என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமியின் உடல் தகனம்
Byமாலை மலர்1 Nov 2017 10:06 AM GMT (Updated: 1 Nov 2017 10:06 AM GMT)
அமெரிக்காவின் டெக்சாஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய சிறுமி ஷெரின் மேத்யூஸின் உடல் வெளியே யாருக்கும் தெரியாத இடத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவரின் இரண்டாவது 3 வயது மகளான ஷெரின் மேத்யூஸ் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆகும்.
கடந்த மாதம் 7-ம் தேதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.
இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் போலீசில் புகார் செய்தார். சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை போலீசார் தேடினர். மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து 27-ம் தேதி சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக டெக்ஸாஸ் போலீசார் தெரிவித்திருந்தனர். அது காணாமல் போன சிறுமியின் உடலாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவ பரிசோதனை நடைபெற்ற நிலையில், அந்த சடலம் காணாமல் போன இந்திய சிறுமியின் உடல் என போலீசார் உறுதி செய்தனர்.
இதற்கிடையே வெஸ்லி மேத்யூ கடந்த வாரம் ரிச்சர்ட்சன் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேத்யூ கூறிய வாக்குமூலத்தில், 'ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்' என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஷெரின் மேத்யூவின் சடலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று அங்குள்ள கல்லறையில் தகனம் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், எந்த இடத்தில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டது என்ற தகவலை போலீசார் கூற மறுத்து விட்டனர்.

Next Story
×