search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரத்தில் கட்டி வைத்து ஆசிரியையை பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்
    X

    மரத்தில் கட்டி வைத்து ஆசிரியையை பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்

    ஜிம்பாப்வேயில் மரத்தில் கட்டிவைத்து ஆசிரியையை பலாத்காரம் செய்த பிச்சைக்காரனை போலீசார் கைது செய்தனர்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் ஹவாஞ் பகுதியை சேர்ந்தவன் பான்பேஸ் நியாம்பியா (32). பிச்சைக்காரனான இவன் அங்குள்ள ஒரு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தான்.

    அவன் பிச்சையெடுக்கும் பணத்தை பயன்படுத்தி விபசார அழகிகளிடம் உல்லாசமாக இருந்து வந்தான். சமபலத்தன்று ஒரு விபசார அழகியை உல்லாசத்துக்கு அழைத்தான். அதற்கு அவள் மறுத்துவிட்டாள்.

    எனவே அவளை இரும்பு கம்பியால் தாக்கி கற்பழித்தான். அவளிடம் இருந்து விலை மதிப்பு மிக்க செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விரட்டிவிட்டான்.

    அதன்பின்னர் இரவு 10 மணியளவில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது ஹவாஞ் நகரம் அருகே விக்டோரியா பால்ஸ் பள்ளி ஆசிரியை ஒருவர் அங்கு வந்தார்.

    அவரை பார்த்ததும் அவனுக்கு ‘செக்ஸ்’ வெறி தலைக்கேறியது. பஸ்சுக்காக காத்திருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்தான். பின்னர் திடீரென அவர் எதிர்பார்க்காதபோது இரும்பு கம்பியால் ஆசிரியையை தாக்கிவிட்டு அருகில் உள்ள புதருக்கு இழுத்து சென்றான். பின்னர் மரத்தில் கட்டி வைத்து கற்பழித்தான்.

    அதிகாலை 3 மணிக்கு ஆசிரியையை அவன் விடுவித்தான். இதற்கிடையே ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட விபசார அழகி கொடுத்த புகாரின் பேரில் பிச்சைக்காரனை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×