என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சில விஷயத்தில் வட கொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்கா விரும்புகிறது: ரெக்ஸ் டில்லெர்சன்
Byமாலை மலர்2 Aug 2017 1:07 AM IST (Updated: 2 Aug 2017 1:07 AM IST)
சில விஷயத்தில் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க விரும்புகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறார். ஒட்டுமொத்த அமெரிக்காவும் எங்கள் தாக்குதல் இலக்குக்குள் வந்துவிட்டது என்று சமீபத்தில் கிம் ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க வடகொரியா எல்லையில் போர் ஒத்திகை செய்து வருகிறது. வடகொரியா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறந்து வரும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில விஷயங்களில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விரும்புகிறது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரெக்ஸ் டில்லெர்சன் கூறுகையில் ‘‘நாங்கள் அரசு மாற்றத்தை நாடவில்லை. அரசு கவிழ வேண்டும் என்றும் நாடவில்லை. வடகொரியா எல்லை நோக்கி ராணுவத்தை அனுப்பவதற்கான மன்னிப்பும் கோரவில்லை. தீபகற்பத்தின் ஒன்றிணைப்பை துரிதபடுத்தவும் முயற்சிக்கவில்லை.
நாங்கள் உங்களுடைய எதிரி அல்ல. ஆனால், நீங்கள் எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலை வழங்குகிறீர்கள். அதற்கு நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். சில விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களுடன் உட்கார்ந்து பேச விரும்புகிறோம்’’ என்றார்.

Next Story
×