என் மலர்

  செய்திகள்

  கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்காவிடில் கடும் விளைவு ஏற்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
  X

  கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்காவிடில் கடும் விளைவு ஏற்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரானில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் முன்னாள் சட்ட வல்லுநரான ராபர்ட் லெவின்ஸ்சன் ஈரான் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானார். அவரது நிலை என்ன? என்பது இன்னும் யாருக்கும் தெரியாமல் உள்ளது. ஆனால், ஈரான் ராணுவம் தான் லெவின்ஸ்சனை கைது செய்து மறைத்து வைத்துள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

  மேலும், அமெரிக்கவைச் சேர்ந்த தொழிலதிபர் சியாமக் நமாஸி மற்றும் அவரது தந்தை பாக்கியூர் ஆகியோர் ஈரானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்நிலையில், ஈரானால் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

  அமெரிக்கர்களை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அனு ஆயுத சோதனை, கத்தார் மீதான் தடை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×