என் மலர்

  செய்திகள்

  தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா
  X

  தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முக்கிய தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காததால் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 350 மில்லியன் டாலர்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
  வாஷிங்டன்:

  அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீவிரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத்துறை சமர்பித்தது. அதில், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

  பாகிஸ்தானுக்குள்ளேயே தாக்குதல் நடத்தும் தெரிக் இ தலீபான் போன்ற அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால், பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆப்கன் தலீபான், லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹக்கானி போன்ற தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

  தலிபான் தீவிரவாத இயக்கத்தின் துணை இயக்கமான ஹக்கானி நெட்வொர்க் ஆப்காகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்கிறது. அமெரிக்காவின் பார்வையில் இந்த இயக்கம் முதலிடம் பிடித்து உள்ளது. ஆனால் ஹக்கானி இயக்கம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட ஹக்கானி நெட்வோர்க் அமைப்பு செயல்பட்டு வருவதையும் அமெரிக்கா தன்னுடைய அறிக்கையில் சுட்டி காட்டியது.

  தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்தாண்டுக்கான நிதி வழங்குவது குறித்து முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நடந்தது.

  அதில், பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் நிபந்தனைகளை விதிப்பது என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்வது தொடர்பாக டொனால்டு டிரம்ப் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

  இந்நிலையில், ஹக்கானி நெட்வொர்க் இயக்கம் மீது பாகிஸ்தான் போதுமான நடவடிக்கையை எடுத்ததாக தாக்கல் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு குழுவிற்கு இந்த அறிக்கையானது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை நிறுத்த அமெரிக்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×