என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் செய்யும் வடகொரியா
Byமாலை மலர்31 May 2017 8:57 AM GMT (Updated: 31 May 2017 8:57 AM GMT)
ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ள நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோல்:
ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ள நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா சோதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஓராண்டில் மற்றும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை, பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையை அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்கா பரிசோதனை நடத்தியுள்ள ஒரே நாளில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
Next Story
×