search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு
    X

    சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு

    சிரியாவில் நேற்று கார் குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    டமாஸ்கஸ்:

    உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியாவில் ஹாம்ஸ் நகரம், கடந்த 2 தினங்களுக்கு முன் அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த நிலையில், அந்த நகரத்தின் புறநகரான அல் ஜஹ்ரா நகரில் நேற்று கார் குண்டு தாக்குதல் நடந்தது.

    இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த கார் குண்டுவெடிப்பு குறித்து அந்த நகர கவர்னர் டலால் அல் பராஜி, சிரிய அரசு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “அல் ஜஹ்ரா நகரத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு அந்தப் பகுதியை அதிர வைத்தது. அந்த குண்டுவெடிப்பில், 4 பேர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் ஹாம்ஸ் நகர பகுதியில் சிரிய அரசு படைகள் முன்னேற்றம் கண்டதற்கு பதிலடியாக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என கூறினார்.



    இதற்கிடையே டமாஸ்கஸ் நகரத்துக்கு தெற்கே அமைந்துள்ள ஷியா பிரிவினரின் புனிதத்தலம் அருகே வெடிபொருட்கள் நிரப்பி நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வாகனம் அழிக்கப்பட்டது. இதனால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. 
    Next Story
    ×